வியாழன், 1 மே, 2014

இரண்டு படங்கள்


Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.There is delay in typing to Tamil. Sorry for the break! will be regular from next posting.

சினிமாவை உட்கார்ந்து பார்க்கப் பொறுமை இல்லாமல் போய் விட்டது. சமீபத்தில் இரண்டு படங்கள் அடுத்தடுத்துப் பார்க்கிற வாய்ப்பு.

ஒன்று வடிவேலு வின் 'தென்னாலி ராமன்'. தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் என்று இருப்பது அபூர்வம். சோட்டா பீம், மாருதி அனுமான் என்று காவியத்தைத் தாறுமாறாகக் கலைத்துக் கோலம் போடும் டிவி அனிமேஷன் படங்களை விட்டால் வேறு கதி இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க வந்தது 'தெனாலி ராமன்'. 

ரொம்பக் கடமையான கதாநாயகனாகவே நடித்த சிவாஜி கணேசன் தெனாலிராமன் வேஷத்தில் (பழைய படம்) அறிவு கூர்மையை அழுத்திக் கொடுத்தார் என்றால் நகைச் சுவை நாயகனான வடிவேலு தன் பாணியில் அறிவை நகைச்சுவையாகக் காட்டுவது குழந்தைகளைக் கவரும் விதத்தில் உள்ளது. எல்லோருமே பார்த்து இரசிக்க முடிகிற படம். கெக்கே பிக்கே அசட்டுத்தன நகைச் சுவை இல்லாமல் நன்றாகப் போகிறது படம்

பானைக்குள் யானை பார்த்த கதையைப் பாட்டி சொல்லிக் கேட்டதை விட, இந்தப் படத்தில் பார்க்க பலமடங்கு நன்றாக உள்ளது. ஆனால் அரண்மனை நிறைய வாரிசுகள்; அந்த 52 பேரும் வாரத்திற்கு ஒருவராக ஆண்டு கொண்டு ஒற்றுமையாக இருந்தால் இன்பம், ‘மாதுளை’ என்று ‘கனி’ப் பெயரை மகளுக்கு இட்டு அழைக்கிறீர்களே என்று கேட்பது எல்லாம் தமிழக அரசியல் வாடை அடிக்கிறது. மற்றபடி 28ஆம் புலிகேசி வாடையும் தூக்கல். இருந்தாலும் மறுபடிப் பார்க்கத் தூண்டுகிறது படம்.

அடுத்த படம் … ‘ஜில்லா’. இன்னும் எத்தனை முறை இதேபோலக் கேனக் கிறுக்காக நடிக்கப் போகிறாரோ விஜய். யாராவது சொல்லக் கூடாதா? ஒரே வன்முறை – மதுரையைக் கண்ணகி கூட இப்படிப் புகை எழுப்பி அழித்திருக்க மாட்டாள். மீனாக்‌ஷி கோபுரத்தைப் பின்னணியில் காட்டிக் கொண்டு ஒரே வன்முறை! கூடவே ஆபாசப் பேச்சு வேறு! ஒரு கதாநாயகியை, அதுவும் போலீஸ் உடையில் இத்தனை ஆபாசப் படுத்த முடியுமா? எப்படி விட்டார்களோ தெரியவில்லை. பாதியில் எழுந்து வந்து விட்டதால் … 

(விசித்ரசித்தன் விரைவில் ஒழுங்காக வரும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக