வியாழன், 12 டிசம்பர், 2019

திருக்குறள் - ஊழ் (செல்வம்)


ஊழ் – (செல்வம்)

371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
செல்வம் பெருகும் நேரத்தில் எதற்கும் அசையாமல் இருப்பார்கள், ஆனால் செல்வம் கையை விட்டுப் போகும் நேரத்தில் தானாகவே மடிந்து (தலை கவிழ்ந்து, உடல் மடிந்து, கூனிக் குறுகிப் பிறருக்குக் கட்டுப்பட்டு) விடுவார்கள்.

372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
ஏழையாக இருந்தவரை அறிவிலி என்று உலகினால் பழிக்கப்பட்ட அதே மனிதன், செல்வம் வந்தவுடன் அறிவாளி (அறிவகற்றும்) என்று ஆகிவிடுவான்.

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
செல்வம் சேர்க்கும் செயலைப் பொருத்தவரை, ஒருவன் எத்தனை நுணுக்கமான கருத்துகள் கொண்ட நூல்களைக் கற்றிருந்தாலும்கூட, அவனிடம் இயல்பாக இருக்கும் அறிவு மட்டுமே கைகொடுக்கும். [கல்வியினால் அறிவை விரித்துக் கொள்ளலாம், ஆனால் செல்வம் சேர்க்கும்போது எல்லோருக்கும் பாகுபாடு இன்றி அவர்தம் இயல்பான அறிவு மட்டுமே பயன்படும்]

374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
செல்வம் பெறுவது, தெளிந்த அறிவைப் பெறுவது என்ற இரண்டும் இயற்கையாகவே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு உலகங்கள். அதாவது செல்வம் இருந்தால் அறிவு கிடைக்கும் என்றோ, அறிவு இருந்தால் செல்வம் ஈட்டலாம் என்றோ ஒன்றை ஒன்று சார்ந்து சொல்ல முடியாது – அது வேறே, இது வேறே. They don’t depend on each other. One does not imply the other.

375. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
செல்வம் ஈட்டும் போது, பொதுவாக நல்லது என்று பின்பற்றுகிற எல்லாம் கூடத் தீயதாகவும், தீயது எல்லாம் கூட நல்லது என்றும் ஆகக்கூடும்.

376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

செல்வமானது ஒரு சமயம் பிடித்து இழுத்தாலும் வராது, மறு சமயம் அள்ளிக் கொட்டித் தள்ளிவிட்டாலும் விலகிப் போகாது, கூடவே ஒட்டிக்கொள்ளும்.

377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
இதெல்லாம் யாரோ போடுகின்ற கணக்கு, அதைமீறி நாம் கோடிப் பணம் தேடி வைத்தாலும் அனுபவிக்க முடியாது.

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
செல்வம் ஈட்டத் துப்பில்லாதவர்கள், யாராவது வந்து கையில் இடுகின்ற உணவு கிடைத்தால் (பிச்சை) போதுமென்று துறவியாகிவிடுவார்கள். [சோறு கண்ட இடம் சொர்க்கம்]

379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
தான் நன்றாக இருக்கும் போது(செல்வந்தராக) பார்க்கும் எல்லாமே நல்லதாகவே தெரியும், ஆனால் தனக்கு முடியாதபோது(ஏழையானதும்) உலகமே துன்பமயமாகத் தெரியும் என்பது உலக வழக்கம்.

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
செல்வத்தைவிட வலிமையுள்ள பொருள் என்று வேறு எதைச் சொல்ல முடியும்? சுற்றி எத்தனை போட்டி இருந்தாலும் செல்வமே அத்தனையையும் முந்திக்கொண்டு முதலிடம் பிடிக்கும்.

திங்கள், 11 நவம்பர், 2019

குறள் - மருந்து


குறிப்பு:
குறைந்த அளவு அதிகாரங்கள் மட்டுமே பத்துக் குறளும் ஒரு கோர்வையான கருப்பொருளாக இருக்கும். அதில் இந்த அதிகாரம் 100% கோர்வையாக ஒற்றைப் பொருளைச் சொல்வது.

1. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

            (மருத்துவ) நூல் பயின்றோர் முக்கியம் என்று கருதிய வளி (வாயு?) முதலிய மூன்றில் ஏதேனும் அளவு கூடினாலும் குறைந்தாலும் நோய் ஏற்படும். குறிப்பு: இதில் எந்த மூன்று என்பது சொல்லப்படவில்லை. உரையாசிரியர்கள் வெவ்வேறு பொருள் கொள்கிறார்கள்.

The learned (medical practioners) perceive that, all body disorders are due to increase or decrease in any one of the said three vitals including Gas(in a body).
2. மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

            ஏற்கனவே அருந்திய உணவானது, செரித்து வெளியேறிவிட்டது (அற்றது) என்பதன் அறிகுறிகளைத் தெரிந்து - எ.கா: பசி எடுப்பது, செய்யப்போகின்ற வேலைக்கு இந்த சக்தி போதாது என்று புரிவது, இப்படியாக - அதன்பிறகு உண்டால், உடலுக்கு மருந்து என்பது தேவைப்படாது.

Body needs no medicine, for thy eats only upon digesting previous meal.

3. அற்றால் அளவறிந்து உண்க: அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

            இப்படிச் செரித்து விட்டால், அதுவே தேவையான அளவு உணவு என்பதை அறிந்து அந்த அளவையே தொடர்ந்து உண்ணுங்கள்; அதுவே உடம்பு வைத்திருப்பவர்கள் நீண்ட காலம் அதைப் பேணிப் பாதுகாக்ப்பதற்கான வழியாகும்.
Know that such digestible food is your limit, and that is way to live longer.

4. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.

            இப்படியாக செரிமானத்தின் அடிப்படையில் அறிந்து தெளிந்து, உணவு, அதன் காலம், அளவு இவற்றை நிர்ணயம் செய்து கொண்டு அதை மாறாமல் கடைப்பிடித்து வந்தால் நன்றாகப் பசித்து, உணவை அனுபவித்து(துய்த்து) உண்ண முடியும்.
Know your digestive limit, type of food, timing, and quantity and make it regular, you can enjoy food with good appetite.

5. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

            இப்படியாக மாறுபாடு இல்லாத உணவை இடையிடையே உணவு மறுத்து (உண்ணா நோன்பிருந்து) வந்தால். உயிருக்கு எவ்விதத் தீங்கும் நேராது.
If such food habit is followed with fasting now and then, there will be no harm to life.

6. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.

            தன் உடம்பிற்கு ஏற்ற இந்தக் 'இழிவு' என்னும் குறைந்த அளவினை (Minimal)அறிந்து உண்பானிடம் இன்பம் தங்கும், அதைப் போலவே 'கழிவு' என்னும் அதிக பட்ச அளவு (Maximum) உணவை உண்பானிடம் நோய் சென்று தங்கிவிடும்.
One who knows the minimal food for his body and following it will enjoy life ; likewise the one who take unlimited food will fall into perpetual illness..

7. தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோயளவு இன்றிப் படும்.

            இப்படித் தன் வயிற்றினால் செரிக்கப்படும் அளவைத் (தீயளவு) தெரிந்து கொள்ளாமல் பேரதிகமாக உண்டால் அளவற்ற நோய் பீடிக்கும்.
If you eat more and more without knowing the digestive power of your body, you will experience all kind of bodily disorders.

8. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

            என்னதான் இந்த நோய், இது வந்ததற்கான ஆதி காரணம் எண்ண என்பதை ஆராய்ந்து, பிறகு அதைத் தணிக்கும் வழியைத் திட்டமிட்டுப் பிழையில்லாமல் பின்பற்றினால் நோய் தீரும்.
Find out the disorder, its route cause and then find the way to remedy it.
9. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

            வயது முதலான நோயுற்றவனது அளவுகளையும், தாக்கம் முதலிய நோயின் அளவுகளையும், நோய் பீடித்த கால அளவையும் கருத்தில் கொண்டு மருத்துவம் பார்க்க வேண்டும்.
The Learnt consider the nature of patient, disorder and its duration before acting upon it.
10. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

            நோயுற்றவன், நோயைத் தீர்க்கும் மருத்துவன், மருந்து மற்றும் அந்த மருந்தினைக் கொடுத்து நோயாளியைக் கவனித்துப் பேணுபவர் என்ற நான்கும் சேர்ந்ததுதான் மருந்து.
The patient, the physician, the medicine and the nurse are the four parts of medicine.