ஞாயிறு, 18 ஜூன், 2017

அறிவியல் – என்ன நடக்குது இங்க?



ரொம்ப சீக்கிரமே, அடுத்த வருடமே, 2018-லேயே …. சைனா நிலவில் பெரிய சாதனை நிகழ்த்தப் போவதாக அறிவிப்பு. அதாவது 18செ.மீ X 16செ.மீ அளவுள்ள ஒரு உலோக உருளை போன்ற பெட்டிக்கு உள்ளே ஒரு சின்ன உயிர் உலகத்தையே இட்டு, உருளைக்கிழங்கு விதையைப் போட்டு, அந்தப் பெட்டியை நிலாவுக்கு அனுப்பி, பெட்டியில் உள்ள உருளைக்கிழங்கு செடியாக வளருமா, அத்துடன் இருக்கும் பூச்சிமுட்டைகளும் உயிர்பெறுமா என்று நிஜமான சோதனை நடத்திப் பார்க்கப்போகிறார்கள். இது வெற்றி பெற்றால் பெரிய அளவில் இப்படிப் பெட்டிகள் செய்து, நேரே செவ்வாய்க்கிரகத்தில் மனிதனைக் கொண்டு இறக்கிக் குடியேறுவதற்கான முதல் படி இது. மற்ற நாடுகள் செவ்வாய்க்கும் சூரியனுக்கும் வண்டி விட்டு இடம் தேடிப் போய்ச்சேர்ந்த அலுப்பைப் போக்க (இன்னும் அரை நூற்றாண்டு?) அங்கே சைனா டீக்கடை அவர்களை வரவேற்குமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக