செவ்வாய், 27 மே, 2014

இலவச தமிழ் உயிரெழுத்து App for phone

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.

இலவசம்!   

விசித்ரசித்தன் வாசகர்களுக்கு: கீழ்க்கண்ட தொடுக்கு உங்களை இலவச windows phone App store பக்கத்திற்கு இட்டுச் செல்லும்.  This App is developed by me and completely free.



Download Free Tamil alphabet learning App for your phone from here






நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் நல்ல வேடிக்கையாக இருந்தது. ஆனால் வாக்குப்பதிவு நிறையக் கிடைத்தது வரவேற்கத் தக்கது. இனி தங்கள் வாக்கின் பலனை அனுபவிக்க வேண்டும் எல்லோரும். விசித்ரமான நிகழ்வுகளுக்குப் பஞ்சமில்லை. ‘கெடச்சது ஆனா கெடைக்கலை’ என்கிற நிலைமை நிறையப் பேருக்கு. அந்தந்த விருப்பம் நிறைவேறினாலும் ஆதார இலக்கு நிறைவேறவில்லை. அலை அலையாய்க் கிளம்பியதில் மக்கள் ‘அலை முழுங்கி ஆதவ’னாக ஆகிவிட்டார்கள். Exit poll எல்லாம் அவரவர் இஷ்டப்படி media வைத்துக் கொண்டதா இல்லை நிஜமாகவே மக்கள் உண்மையை மறைத்துக் கொண்டிருந்தார்களா என்று தெரியவில்லை. விலைவாசியைக் குறைத்து மக்கள் தொகையைக் கட்டுப் படுத்தினால் அதுவே நாடு நிலையான முன்னேற்றப் பாதையில் செல்ல உதவும்.
நிறையப் பேரிடம் பேசிப் பார்த்தால் ‘நல்லது நடக்கட்டும்’ என்கிறார்களே தவிர என்ன ஏது என்று குறிப்பாகச் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் . இதனிடையே நாஸ்டர்டாம் வேறு இதே நடக்கும் என்று எழுதி வைத்ததாகக் கிளம்பியிருக்கிறது. இனி நாடி ஜோதிடத்தில் இருக்கிறது என்று வருவார்களோ என்னவோ? அடுத்த வேளை உண்பதும், உறங்குவதும் உறுதி இல்லை என்று வாழுபவர்க்கு இதெல்லாம் என்ன ஆகப்போகிறது.
எண்ணிக்கை கிடைத்தது
வலிமை கிடைக்கவில்லை
வேண்டும் வேண்டும் என்ற தோல்வி கிடைத்தது,
காரணம் நான் என்று மார் தட்ட முடியவில்லை
அழுகுனி ஆட்டத்தில் தலை பிழைத்தது – ஆனால்
மானம் போய்விட்டது
இதை முதலிலேயே தெரிந்து, தெளிந்து
நான் வரலை ஆட்டத்திற்கு,
பதவி வேண்டாம், கட்சி போதும் என்றவர்களுக்கு மட்டும்
எதை எதிர்பார்த்தார்களோ அதுவே நடந்தது …
நாடி ஜோதிடத்தைவிட இனி அவர்களிடம் போகலாம்