திங்கள், 12 மே, 2014

Robert Caldwell - Comparative grammar of Dravidian Languages (Tamil Translation)

Original book:
Title: Comparative grammar of Dravidian Languages (Tamil Translation)
Author: Bishop Robert Caldwell
Note: In this blog you can read Tamil translation of the book as a serial. This is part-1 in the serial. Skipping contents and foreword pages for now and starting directly at where the matter starts.



2.   அறிமுகம்
திராவிட ஒப்பிலக்கணம்
பல்வேறுபட்ட திராவிட மொழிகளின் இலக்கணக் கோட்பாடுகளை ஆராய்ந்து, ஒப்பிட்டு அவற்றின் மூல கட்டுமானத்தையும் தனித்துவத்தையும் பற்றிய மென்மேலும் ஆராய்ந்து வளப்படுத்துவதே இந்த நூலின் இலக்கு.
ஐரோப்பிய, ஆசிய மொழிகளின் வகைப்படுத்தல் வழி அமைந்த மொழிக் குடும்பங்களுடன் இந்த திராவிட மொழிக் குடும்பங்களுக்கு உள்ள தொடர்புகளையும் வெளிக்கொண்டு வருவது இந்நூல் ஆசிரியரின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
ஒவ்வொரு திராவிட மொழியின் கட்டுமானமும்  ஆழ்ந்து ஆராயப் பட்டாலும் அதனதன் முக்கியத்துவத்தையும் ஆசிரியரின் அந்த மொழி அறிவையும் பொறுத்த வகையில் தமிழ் – ஆசிரியர் ஏறக்குறைய 37 ஆண்டுகள் தன் இறைப்பணியில் கற்றுக் கொண்ட மொழி, திராவிட மொழிகள் எல்லாவற்றுக்கும் முதலாகவே வளர்க்கப் பட்டுவிட்ட மொழி, பன்பட்டுவிட்ட மொழி – பல்விதங்களில் திராவிட மொழிக் குடும்பங்களுக்கு உதாரணமான மொழி என்பதால் இதன் மீது அதிக ஈடுபாடு காட்டி எழுதப் படுகிறது இந்நூல்.
‘திராவிடம்’ என்ற பொதுச்சொல் இங்கே தென் இந்தியாவின் பெருவாரியான மக்களால் பேசப்படுகின்ற பல மொழிகளையும் குறிக்க உபயோகப்படுகிறது.
ஒரிஸா தவிர்த்து குஜராத்தி, மராத்தி பேசுகிற மேலைப் பகுதி இந்தியா தவிர்த்து, மற்றபடி விந்தியமலை, நர்மதா நதியில் தொடங்கிக் கன்யாகுமரி வரை உள்ள தீபகற்பப் பகுதியில் தொன்று தொட்டு வசிக்கிற மக்கள் அனைவரும் ஒரே இனத்தின் வெவ்வேறு கிளைகள்; ஒரே மொழியின் வெவ்வேறு திரிபுகளைப் பேசுகிறார்கள்; இவை அனைத்தும் ‘திராவிடம்’ என்ற ஒரே சொல்லால் இங்கே குறிக்கப்படுகிறது. இந்த மொழிக் குடும்பத்தின் கூறுகள் வடக்கே வங்காளத்தின் ராஜ்மஹால் குன்றுகளையும் தாண்டி பலூசிஸ்தானம் வரை விரவிக் கிடக்கின்றன.
குஜராத்தி, மராத்தி (அதன் தொடர்புடைய கொங்கணி), ஒரிஸ்ஸாவில் பேசப்படும் ஒரியா, சமஸ்கிருதத்தில் இருந்து உடைந்து கிடக்கிற ஹிந்தி என்று தீபகற்ப இந்தியாவில் பேசப்படுகிற பிற மொழிகள், பேச்சு வழக்குகள் அந்தந்த வட்டார வழக்குகளாகவே நிறு விடுகின்றன. இதையும், திராவிட மொழிகளையும் தவிர்த்து இன்னும் சில மொழி வழக்குகள் உள்நாட்டைச் சேர்ந்தவை என்றோ பேச்சுவழக்குகள் என்ற வகையிலோ ஒருசில சமுதாயத்தைச் சேர்ந்த மக்களால் மட்டுமே தீபகற்ப இந்தியாவில் பேசப்படுகின்றன.

(தொடரும் ..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக