செவ்வாய், 13 மே, 2014

Robert Caldwell - Comparative grammar of Dravidian Languages (Tamil Translation) -3



விசித்ரசித்தன் வாசகர்கள் கவனத்திற்கு – விசித்ரசித்தன் மொழி பெயர்ப்பு வேலை தொடந்து நடந்தாலும், Caldwell புத்தக வேலை அதைவிட அருமையானது என்பதால், தற்சமயம் விசித்ரசித்தன் வெளிவரும் வேகம் குறைகிறது, ஆனால் நின்றுவிட வில்லை. தொடர்ந்து படிக்கவும்.


Original book:
Title: Comparative grammar of Dravidian Languages (Tamil Translation)
Author: Bishop Robert Caldwell
Note: In this blog you can read Tamil translation of the book as a serial.
Author note: This translation is an individual's effort. If anyone wants to help to publish this faster and as a hardcopy book, you are welcome.


Robert Caldwell - Comparative grammar of Dravidian Languages (Tamil   Translation) -3



சமஸ்கிருதம் – தேசத்தில் எந்த மூலையிலும் பேச்சுமொழியாக ஒரு காலத்திலேனும் இருந்திருக்கலாம் என்ற சாத்தியம் குறைபாகவே உள்ளது என்றாலும், தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஊரிலும், பிராமணர்கள் – அதாவது ஆரம்பகால பிராமணீய குடியேறிகளின் மரபில் வந்தவர்கள் - அவர்களால் படிக்கவும் ஓரளவு பேசவும் வழக்கத்தில் இருக்கிறது. இவர்களின் தாக்கம் திராவிட உயர் கலை வாழ்வியலுக்கும் குறிப்பிடக்கூடிய அளவு இலக்கிய கலாச்சாரத்திற்கும் காரணமாக இருக்கிறது. இந்த பிராமணர்கள் தங்கள் பெயர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ளவில்லை; அத்தோடு கோவில் பூஜாரியாகவும் இருக்கிறார்கள்; தொழில் கல்விகும் கற்கிறார்கள். வட்டார வழக்கு மொழியில் அதிக அறிவு பெற்று வீட்டிலும் அதிலேயே உரையாடிக்கொண்டால் கூட இவர்களால் சமஸ்கிருதத்தை சரளமாகப் பேச முடிகிறது. தங்கள் வாழுகிற இடத்திற்குத் தக்கவாறு மாறி, அந்தந்த வட்டார வழ்க்கு மொழிகளை ஏற்றுக் கொண்டு அதன் வழியில் திராவிட பிராமணர், ஆந்திர பிராமணர், கர்நாடக பிராமணர் என்று தனித் தனி ஜாதிகளாகவே ஆகிவிட்டார்கள் என்று சொல்லலாம். ஆனால் இவர்கள் யாவரும் ஒரே மரபில் வந்தவர்கள் என்பதும், இன்றைக்கு சாதனை என்றும் தொழில் நிமித்த மாகவும் கற்றுக் கொள்ளுகிற சமஸ்கிருத மொழிதான் அவர்களின்  மூதாதையர் வழங்கியது என்பதும் சந்தேகமில்லை.
தக்காணத்தின் முகமதிய மக்களால் பேசப்படுவது ஹிந்துஸ்தானி மொழி. இவர்களில் பலர் போர் வீரர் போன்ற அல்லது ஆப்கானிஸ்தானத்தில் இருந்து வந்த, அல்லது வட இந்தியாவிலிருந்து தெற்கே வரை படையெடுத்து ஆக்கிரமித்த முகமதியர்கள் வழி வந்தவர்கள். ஹைதராபாத் தேசத்தின் சில பகுதிகளில் வழக்கு மொழி ஹிந்துஸ்தானி என்று கூடச் சொல்லலாம். ஆனால் பொதுவாக தென் இந்தியா முழுவதும்  அடித்தட்டு மற்றும் மத்திய தட்டு முகமதிய மக்கள் அந்தந்த இடங்களின் வழக்கு மொழிக்கு இணையாக இதையும் பேசுகிறார்கள். ஆங்கிலெயர்களால் ‘லுப்பிகள்’ என்று அழைக்கப் படுகிற தென் இந்திய முகமதியர்களின் மூதாதையர் மொழியாக இருந்ததில்லை. மாறாக, ஹிந்துஸ்தானியானது, கீழைக் கரையோர ‘சோணகர்கள்’ (யவனர்கள்) மற்றும் மேலைக் கரையோர ‘மாப்பிள்ளை’ கள் இவர்களுடைய மூதாதையர் மொழி மட்டுமே. இவர்கள் அரபிய வணிகர்கள் மற்றும் அவர்களால் மத மாற்றம் செய்யப்பட்ட உள்ளூர் வாசிகள் வழிவந்தவர்கள் ஆவர். இவர்கள் தமிளோ அன்றி மலையாளமோ பேசுகிறார்கள்.

(தொடரும் ... )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக