செவ்வாய், 6 மே, 2014

மடிணி - Laptop



 Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.

 மடிணி - Laptop

ஆங்கிலத்தில் கலைச் சொற்கள் வரும் போது ரொம்ப எளிதாக ஏற்றுக் கொண்டு விடுகிறது மொழி. உதாரணம். Table top, Lap top, Tablet – மேஜை மீது வைக்கும் அளவு சின்ன கணிணி, இன்னும் சின்னதாகி மடிமேல் வைத்துக் கொள்ளும் அளவு வந்து, அது இன்னும் குறுகி கையளவு ஆனது.
இதைத் தமிழில் மொழி பெயர்க்கத் தடுமாற்றம். எத்தனை புது வார்த்தைகள் என்றாலும் எழுத்தில், பேச்சில் புழக்கத்தில் விட்டால் அது மக்களிடம் போய் எளிதில் ஒட்டிக் கொள்ளும். ஆனாலும் கொஞ்சம் தடுமாறுகிற மொழி பெயர்ப்பு அத்துனை சுலபத்தில் வழக்கு மொழிக்கு வராது.
கணிணி என்ற வார்த்தை நீண்ட காலம் தட்டுத் தடுமாறி இப்போது ஓரளவு இயல்பாகிவிட்டது. சொன்னால் யாரும் இதுதான் என்று குறிப்பாக அறிந்து கொள்கிறார்கள். மடிக்கணிணி என்று நீட்டி முழக்குவது இலகுவாகவோ இயல்பாகவோ வரவில்லை. ‘மடிணி’ என்ற வார்த்தை மடியில் வைப்பதால், மடித்து வைப்பதால் என்று பல காரணங்களைத் துணை கொண்டு இலகுவாகவும் எழுத, பேச வருகிறது. இலக்கணப் படி இது ‘காரணப் பெயர்’.
Tablet கொஞ்சம் சிக்கலான விஷயம். ஆனாலும் அதற்கு மருத்துவ வார்த்தையை எடுத்து முழி பெயர்ப்பதை விட, வழக்கு மொழி வார்த்தையை எடுத்து மொழி பெயர்த்தால் நல்ல வார்த்தை கிடைக்கத்தான் செய்கிறது. இன்னொரு நாள் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக