வியாழன், 15 மே, 2014

Robert Caldwell - Comparative grammar of Dravidian Languages (Tamil Translation)-4

Original book:
Title: Comparative grammar of Dravidian Languages (Tamil Translation)
Author: Bishop Robert Caldwell
Note: In this blog you can read Tamil translation of the book as a serial.

Author note: This translation is an individual's effort. If anyone wants to help to publish this faster and as a hardcopy book, you are welcome.


விசித்ரசித்தன் வாசகர்கள் கவனத்திற்கு – விசித்ரசித்தன் மொழி பெயர்ப்பு வேலை தொடந்து நடந்தாலும், Caldwell புத்தக வேலை அதைவிட அருமையானது என்பதால், தற்சமயம் விசித்ரசித்தன் வெளிவரும் வேகம் குறைகிறது, ஆனால் நின்றுவிட வில்லை. தொடர்ந்து படிக்கவும்.





தென் இந்திய வழக்கு மொழிகள் – 3
கொச்சியிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் உள்ள யூத மக்கள், பிராமணர்கள் சமஸ்கிருதம்  பேசுகிற அதே காரணங்களுக்காக ஹிப்ரூ மொழியைப் பேசுகிறார்கள். சில முக்கிய நகரங்களில் குஜராத்திய வட்டிக் கடைக்காரர்களும் பிற கடைகள் நடத்தும் பாரசீகர்களும் குஜராத்தி மற்றும் மராத்தி பேசுகிறார்கள். இந்திய மண்ணில் பிறந்த கலப்பினமான போர்ச்சுகீசியர்கள் தங்கள் தாய் தந்தையர் பேசிவந்த கொச்சை போர்ச்சுகீசிய மொழியை (கோவா பகுதி தவிர்த்துப் பிற இடங்களில்) வேகமாகக் கைவிட்டு ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்; ஆனால் ஃப்ரஞ்சு அலுவலர்களும் அவர்கள் பரம்பரையும் இன்னும் ஃப்ரான்சு வசமே உள்ள பாண்டிச்சேரி (புதுச்சேரி), காரைக்கால், மாஹே (மயூரி) இந்த இடங்களில் ஃப்ரஞ்சு மொழி தன் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.
ஆங்கிலம், பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளில் ஆளும் வர்க்கத்தின் மொழியாக மட்டும் இல்லாமல் கிழக்கிந்திய, ஐரோப்பிய அல்லது இந்திய-பிரிட்டிஷ் மக்களிடமும் வழங்கி வருகிறது; அத்தோடு நீதி, வணிகம் போன்ற அரசுத் துறை நிர்வாகத்தில் உள்ள உள்ளூர் வாசிகளிடமும் அது பரவியிருக்கிறது; மெட்ராஸ் பிரஸிடென்சி மற்றும்முக்கிய நகரங்களில் அது உயர்கல்வி மொழி என்றிருந்த சமஸ்கிருதத்தின் இடத்தை ஏற்கனவே பிடித்துக் கொண்டு விட்டது. ஆனாலுல்கூட ஆங்கிலமோ அன்றி வேறெந்த அந்நிய மொழியோ வழக்கு மொழியாக மாறிவிடும் சந்தர்ப்பம் தென்னிந்தியாவில் எந்தப்பகுதியிலும் இல்லை என்றுதான் தெரிகிறது. பலமும், எண்ணிக்கையும் (and venerated race) இனத்தின் மொழியான சமஸ்கிருதத்தையும் மீறி இரண்டு ஆயிரம் ஆண்டுகாலமாக தங்கள் இடத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த உள்ளூர் திராவிட மொழிகள் எந்த ஒரு அந்நிய மொழிக்கும் இடங்கொடாமல் வெற்றிகரமாகப் பிழைத்துக் கொண்டுவிடும் என்றே எதிர் பார்க்கலாம்.
அடிக்குறிப்பு:
( ஸர் எர்ஸ்கினெ பெர்ரி (ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி இதழில் இவர் கட்டுரையைப் பார்க்கவும்) சொல்வதைப் போல ஆளும் வர்க்கத்தின் மொழியான ஆங்கிலம், பிரிட்டிஷ் இந்தியப் பகுதி முழுமைக்கும் பொது வியாபார மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று உடன்படுகிறேன். ஆங்கிலம் தேறினால் மட்டுமே மேலிருந்து அடிமட்டம் வரி உள்ள அனைத்து அரசுப் பதவிகளிலும் நுழைய முடியும் என்ற அவசியத்தை கொண்டு வந்தாலே போதும், இது எளிதில் நிறைவேறி விடும் என்பது உறுதி. எல்லா இடங்களிலும் உள்ளூர் வாசிகள் இந்த முறைக்குக் தகவமைந்து கொள்வார்கள் என்பதோடு, தயக்கம் காட்டாமல் (alarcity) மகிழ்ச்சியாகவும் முன்வருவார்கள்; புது ஆணைக்குத் தப்பிக்க முடியாது என்பதால் ஆங்கிலப் பள்ளிகளும் ஆங்கிலம் கற்கத்தேவையான இன்னபிற வசதிகளும் வேகமாகப் பெருகிவிடும்.மேல் கண்ட பத்தியை அது எழுதப்பட்ட காலத்தின் ஞாபகார்த்தமாக(1855) மாற்றாமல் அப்படியே முன்வைக்கிறேன். குறைந்த அளவு மெட்ராஸ் பிரசிடென்சியைப் பொறுத்தவரை இந்த மாதிரி சிபாரிசு இன்று தேவையில்லை. 1861ல் ஆங்கிலம் உட்பட்ட பொது அறிவுக்கென்று ஒரு பொதுத் தேர்வு முறை நிறுவப்பட்டு, ஆண்டுக்கு ரூபாய் 25க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள பொதுப் பணித்துறை வேலைகளுக்கு இந்தத் தேர்வு கட்டாயமாக்கப் பட்டது.1867ல் இது ஆண்டுச் சம்பளம் ரூபாய் 20 என்று திருத்தி அமைக்கப் பட்டது. இந்த ஏற்பாடு கிராமப் புறங்களில் கூட பொதுப்பணிக்கும் பொது மக்களுக்கும் பரஸ்பரம் வசதியாக அமைந்துவிட்டது. இந்த ஆணையை இதற்கு மேலும் விரிவுபடுத்த அரசு முன்வரும் என்று நான் கருதவில்லை.)
(தொடரும் ...)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக