ஞாயிறு, 30 மார்ச், 2014

துளிக்கனவு




குறிப்பு: விசித்ரசித்தன் அடுத்த அத்யாயம் செவ்வாயன்று ..

துளிக்கனவு

விளக்கொளியின் விளக்கத்தில்
விழியோரம் துளிக் கனவு!
இருள் வென்ற போதையிலே
மயக்கமாய் விளக்கசைவு!
வேம்பு பூத்திருக்கு
விலையில்லாக் காத்திருக்கு
கதிர் முற்றிக் கருக்கொண்டு
களவுக்குச் சேதி சொல்லி
விழியமர்த்த முடியாமல்
விளைத்தவனை நிறுத்திவைக்க
பனை மரத்து நிழலடியில்
பகல் நேரம் பழி கிடந்து
வெயில் போன பின்னாலே
வெளியேறி நடை போன
விளக்கொளியின் விளக்கத்தில் …

செவ்வாய், 25 மார்ச், 2014

அலை

Note: In this blog you can read Tamil Translation of Novel 'The Fountainhead' by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.



மன அலை




ஆழ்கடல் போல அலைகிறது

நீரின் கணத்தில் தளும்பத் தளும்ப

நிறைந்த இடத்தில் நிலை கொள்ளாமல்

கனமாய்க் கனக்குது கடலாய் மனது!

திங்கள், 24 மார்ச், 2014

விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் - அத்யாயம் 11





Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.
விசித்ரசித்தன் தமிழ் மொழிபெயர்ப்புத் தொடர் -அத்யாயம் 11:பகுதி 2


ஹென்றி கேமரான் அலுவலகம். ரோர்க் வேலையில் ஆழ்ந்திருந்தான்.
“ராத்திரி வேலை முடிந்ததும் என்னைப் பார்த்து விட்டுப் போ” என்று ஹென்றி கேமரான் குரல் கலைத்தது.

“ஆகட்டும்” என்றான் ரோர்க்.

படக்கென்று வந்த வேகத்தில் திரும்பிப் போனார். கடந்த ஒரு மாதத்தில் அவர் பேசிய நீண்ட வாசகம் இதுதான்.

தினம் வந்து மௌனமாகத் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப் போகிறான். திடீர் திடீரென்று அவன் முதுகின் பின்னால் தோன்றி வேலை செய்வதை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பார் கேமரான். வரைபடத்தில் அழுத்தமாகப் பதிகிற அவன் கரங்களைத் தன் கூரிய பார்வையால் பிடுங்கி எடுத்து விட நினைப்பது போன்ற கவனம். மற்ற இரண்டு வரைபடக் கலைஞர்களும் கேமரான் பின்னால் நிற்கிறார் என்றாலே நடுங்கிப் போவார்கள். ஆனால் ரோர்க் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக மொக்கையாகிப் போன பென்சிலைத் தூக்கியெறிந்துவிட்டுக் கூரான வேறு ஒன்றை எடுத்துத் தன் வேலையைத் தொடர்ந்தான். “உம் உம் ..” கேமரான் உறுமலுக்கு சற்றே தலையை உயர்த்தி “என்ன விஷயம்?” என்று சாவாதன மாகக் கேட்பான் ரோர்க். பதிலுக்கு உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை என்ற அலட்சிப் பார்வையோடவெளியேறிவிடுவார். ரோர்க் தன் பாட்டுக்கு வேலையைத் தொடருவான்.

மற்ற இருவர் கிசுகிசுத்தார்கள். “மோசம். இவனைத் தலைக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அவரைக் குற்றம் சொல்ல முடியாது. ரொம்ப நாள் தாங்கமாட்டான்.” சொன்னவன் கேமரானிடத்தில் ஆதி காலத்திலிருந்து இருப்பவன். அடுத்தவன் நிறைய இடங்களில் விரட்டப் பட்டு இங்கே தஞ்சம் அடைந்தவன்.

இரண்டு பேருமே ரோர்க்கை வெறுத்தார்கள். அவன் முகத்தைப் பார்த்தாலேயே யாருக்கும் வெறுக்கத்தான் தோன்றியது. பொக்கிஷ அறைக் கதவைப்போல சதா மூடிக்கிடக்கும் அவன் முகம். அத்தகைய அறைக்குள் இருக்கிற பொருளின் மதிப்பை அறிந்து கொள்ள விருப்பமில்லை மனிதர்களுக்கு. அவன் அங்கிருப்பது அவர்களுக்கு வினோதமான சங்கடத்தை ஏற்படுத்தியது. இருக்கிறான் என்ற உணர்வேஅத்தனை பேரையும் அழுத்தினாலும் ஏனோ அவன் அங்கே இல்லை என்றும் தோன்றியது. அவன் இருப்பே மற்றவர்களைக் காணாமல் அடிக்கும் மாயம்!

கிழக்கு நதியோரம் இருந்த தன் உறைவிடத்திற்கு நீண்ட தூரத்தை நடந்தே கடந்தான். வாரம் இரண்டரை டாலருக்கு அங்குதான் மொத்த மேல் தளமும் – சாமான் அறைதான். விசாலமாகக் கிடைத்தது. ஒழுகுகிற தகரக் கூரைதான். ஆனாலும் ஒரு பக்கச் சுவர் முழுக்க கண்ணாடி ஜன்னல். உடைந்த இடத்தில் அட்டை போட்டு அடைத்திருந்தது. ஜன்னலுக்கு வெளியே ஒரு புறம் நதி, மறு புறம் நகரம்.

ஒரு வாரத்திற்கு முன் கிராமப்புற வீடொன்றின் படத்தை அவனிடம் விசிறி “இதை உருப்படியான வீடாக்க முடியுமா என்று பார்” சொல்லிவிட்டுப் போனார். அடுத்த நாட்களில் ரோர்க் பக்கம் அவர் தலை காட்டவேயில்லை. ரோர்க் நேற்றிரவு படங்களை முடித்து அவர் மேஜையில் வைத்துவிட்டிருந்தான். இன்று இரும்புத்தூண் அமைப்பு படம் ஒன்றை அவன்முன் வீசி விட்டுப் பேசாமல் போய் விட்டார். நாள் முழுக்க அங்கு தலை காட்டவில்லை.

மற்றவர்கள் போஇ விட்டார்கள். ரோர்க்கும் எண்ணெய் வண்ண ஓவியத்தின் மீது பழைய துணியை இழுத்து மூடிவிட்டு கேமரான் அறைக்குள் நுழைந்தான். அவன் வரைந்த கிராமிய வீட்டின் ஓவியங்கள் மேஜையில் பரப்பிக் கிடந்தன. பக்கவாட்டு விளக்கின் வெளிச்சம் கேமரானின் கன்னம், தாடி, தோள் பட்டை, கை விரல்கள், படத்தின் விளிம்பு என்று பாதி இடத்தில் படர்ந்து மறு பாதியை இருட்டடித்தது. 

“உனக்கு இனி வேலை இல்லை போய்விடு”

ஒரு காலை முன் வைத்தபடி சிலையான ரோர்க் பிறகு நிதானமாக விசாரித்தான் “அப்படியா?”.

“வா இங்கு. உட்கார்.”

பணிந்தான்.

“உன்னிடம் திறமை இருக்கிறது. நீ தேர்ந்தெடுத்த வழிக்குத் தகுந்த திறமை. ஆனால் ரோர்க், இதெல்லாம் வெட்டி வேலை. விட்டுவிடு. பின்னால் வருத்தப் படுவதற்கு இப்போதே விலகிவிடு.”

“புரியவில்லை”

“இலட்சியம் வைத்துக் கொண்டு அடைய வழி தேடுகிறாய். ஆனால் யாரும் உன்னை அனுமதிக்கப் போவதில்லை. உன்னுள் இருக்கின்ற மகத்தான சிந்தனையின் பொருட்டு சித்திரவதையை அனுபவிப்பதில் பொருளில்லை. இப்போதே விட்டுவிடு. முழுமை அடையவில்லை என்றாலும் இதுவே போதும். இவர்கள் வழியில் போனால் தாராள ஏராள பணத்தைக் கொட்டுவார்கள். ஏற்றுக்கொள் ரோர்க். பின்னால் எப்படியும் ஏற்றுக் கொள்ளத்தான் போகிறாய்.. இடையில் உள்ள வேதனை வேண்டாம். உனக்கு இதெல்லாம் தெரியாது. நான் நன்றாக அறிவேன். உன்னைக் காப்பாற்றிக் கொள். இங்கிருந்து போய்விடு. வேறு யாரிடமாவது சேர்ந்துவிடு.”

 (தொடரும் ... )