வியாழன், 20 மார்ச், 2014

நாட்டியம், நடனம், தமிழ்த் திரை – பகுதி 3



 Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

    நடனம் என்று பார்க்கும் போது சில அரிதான தருணங்களும் உண்டு. ‘மாமா, மாமா, மாமா … ஏமா ஏமா ஏமா ..’ என்று எம்.ஆர்.ராதா; ‘குறத்தி வாடி எங்குப்பி .. இங்ஙா, இங்ஙா’ என்று ஜெமினி கணேசன் (உண்மையில் பெரிய கொடுமை) என்று டப்பா பாடல்களுக்கு ஆடியிருக்கிறார்கள். ரொம்பப் பழைய நாயகர்கள் பி.யூ.சின்னப்பா, தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் போன்றோர் மட்டுமே இதிலிருந்து தப்பிய தலைகள்.

     ‘ஓ ரசிக்கும் சீமானே ..’ என்று குமாரி கமலாவும், ‘தொட்ட இடமெல்லாம் தித்திப்புடன் இருக்கும் ..’ என்று வெண்ணிற ஆடை நிர்மலாவும் நாட்டியத்திலிருந்து நடனத்திற்குத் தள்ளப்பட்டார்கள். மேல் நாட்டு club dance தவறாமல் இடம் பெற்ற காலமும் உண்டு. இந்த Item song  நாயகிகள் ஜேம்ஸ் பாண்ட் ரக ஜெய் சங்கர் படங்களில் வந்தார்கள். வண்ணப்படம் வந்த பிறகு மொத்த trend-ஐயும் மாற்றி எல்லாக் கதாநாயகிகளையும் Item song ஆடவிட்டது, Duet பாடல்களில் நாயகிகளின் உடையைக் குறைத்து கனவுப் பாடலென்று உலவ விட்டது எல்லாப் பெருமையும் எம்.ஜி.ஆர் ஐயே சேரும். உலகம் சுற்றும் வாலிபன், இதயக்கனி, உழைக்கும் கரங்கள், குமரிக் கோட்டம் என்று எம்.ஜி.ஆர் அரசியல் ஏற்றம் காணக் காரணமான படங்கள் எல்லாம் இந்த வகைதான்.

     எம்.ஜி.ஆர் ரும் சிவாஜியும் விடாமல் குத்து ஆட்டம் ஆடினார்கள். சமீபத்திய படங்களில் நாட்டியம் குறைந்து நடனம் நடனம், Item song  ஆக்கிரமித்து விட்டது. குஷ்பு, சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் அரிதாக ஒரு நாட்டியம் போட்டார்கள். தவிர வேறு சமீபத்திய நாயகிகள் இதில் இறங்கக் காணோம். மாறாக சந்தானமும் power starம்தான் நாட்டிய உடையில் வந்து மிரட்டுகிறார்கள்.
( முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக