திங்கள், 5 மே, 2014

சென்னை விமான நிலைய ஓடு பாதையின் நடுவே ஒரு அநுபவம்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.

முதல் 10 அத்யாயங்கள்



சென்னை விமான நிலைய ஓடு பாதையின் நடுவே ஒரு அநுபவம்

கடந்த வெள்ளிக் கிழமை. தயங்கித் தயங்கித்தான் Air India. வேறு வழியில்லை. அந்த நேரம்தான் ஹைதராபாத்தில் அலுவலக வேலையையும் முடித்துக் கொண்டு சென்னையில் இருந்து தெற்கே இரயிலைப் பிடிக்க சௌகரியம். முதல் நாளே போன் செய்து ‘உங்கள் விமானம் நாளை 30நிமிடம் தாமதமாகக் கிளம்பும். சிரமத்திற்கு மன்னிக்கவும்’. இதுவேபெரிய ஆச்சரியம்! என்னடா இத்தனை அக்கறை வந்துவிட்டதா ஒரு அரசு நிறுவனத்திற்கு? அப்புறம் e-mail, SMS எல்லாம் தேடிப் பார்த்தால் அங்கேயும் இரண்டு நாள் முன்பே செய்தி வந்து கிடக்கிறது. சென்னையில் இரயில் 10.20க்கு என்பதால் சரி கொஞ்சம் அரக்கப் பரக்க ஓடினால் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை.
எல்லாம் நல்லாத்தான் நடந்தது. சரியாய் 7.30க்குக் கிளம்பல், டீயும் பிஸ்கட்டும் வேறே. சமீபகாலமாக தனியார் விமான சேவையையே பயன்படுத்தியதாலும், அவை எல்லாம் தண்ணீர் கொடுப்பதைக் கூட நிறுத்தி விட்டதாலும் இது அடுத்த ஒரு ஆனந்த அதிர்ச்சியாகவே இருந்தது. விமானம் ஏறக்குறைய நிரம்பி இருந்ததன் காரணம் இதுதானா? சிப்பந்திகள் கூட முகம் சுளிக்காமல் (சிரிப்பதில்லை என்றாலும் போகட்டும். முன்பெல்லாம் கடு கடு என்று முகத்தை வைத்துக் கொள்வார்கள். பையை வாங்கி மேலே வைத்தால் குறைந்துவிடும். Gazetted rank ? இலாவகமாக விலகி நின்று, நாம் தடுமாறுவதைக் கையை இறுகக் கோர்த்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். என்ன மடியோ? ) பயணிகள் பையை மேலேவைக்க உதவிக்கரம் கூட நீட்டினார்கள். 
சரியான நேரத்திற்கு ஓடு பாதையையும் தொட்டாகிவிட்டது. வேகத்தைத் தளர்த்துகிறது கூட உணர முடிகிறது. ஆனால், சில நொடிகளிலேயே அத்தனை வேகத்தில் திடீரென்று ஒரு குலுங்கு .. மௌனம்!  ஒன்றும் புரியவில்லை. யாரும் ஊ .. ஆ .. என்று சத்தம் கூடப் போடவில்லை. சில நொடிகள் கழித்து பைலட் குரல் “There is problem and we could not move out of this runway. So we need to wait till ground crew comes. It will take 15-20 minits”. நிலைமை என்னவென்று புரியவில்லை. எழுந்திருக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் கையில் போன் வைத்திருந்தவர்கள் பேச ஆரம்பித்தார்கள். “ஆமாமா! இன்னும் ஒரு 15 நிமிடம். என்னவோ பிரச்சினை. Runway யில் நின்னுட்டுக்கோம்.” பக்கத்தில் இருந்த ஒருவர், “என்னவோ முன் டயர் வெடிச்சிருச்சிபோல. வந்து கூட்டிட்டுப் போவாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருவழியாய் ஆட்கள் வந்தார்கள், வண்டியில் மாட்டி இழுத்துக் கொண்டு போனார்கள். மறுபடி பைலட் “Flight cannot move. So we are being tucked over. Sorry for inconvenience”. அடுத்து இறங்கவேண்டிய விமானங்கள் எல்லாம் வட்டமடிப்பது தெரிந்தது. பக்கத்தில் இருந்த தளத்திற்குக் கொண்டு சென்று இறக்கி, புத்தம் புது வண்டியில் ஏற்றி 9.01க்கு வெளியேறவிட்டார்கள். அவரவர் இருந்த அவசரத்தில் யாரும் நின்று நிறுத்தி விசாரித்தார்களா தெரியவில்லை. நான் நிதானமாக இன்று தேடிப்பார்த்தேன் – எப்படியும் செய்தி வெளியிட்டிருப்பார்களே?

ஞாயிற்றுக் கிழமை காலை மறுபடி ரிசர்வேஷன் இல்லாததால் எதிலாவது இடம் கிடைக்குமா என்று ஒவ்வொரு கவுண்ட்டராக விசாரிக்கையில், Angry answer at Air India counter “we don’t fly to Hyderabad!”. மேலே நிதானமாகத்தான் விசாரிக்க வேண்டும். என்னமோ தப்பு! ஆனாலும், சரி பிழைச்சு வந்தாச்சே, அதுவும் அத்தனை பேரும் என்று பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக