புதன், 7 மே, 2014

Bishop Robert Caldwell - Tamil

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.
முதல் 10அத்யாயங்கள்




Bishop Robert Caldwell - Tamil


இன்று இராபர்ட் கால்டுவெல் பிறந்தநாள். 200வது ஆண்டு என்பதால் கொஞ்சம் நிறையவே நினைக்கிறார்கள் போல. 

கால்டுவெல் தமிழுக்குச் செய்த பெரிய தொண்டு ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’(Comparative Grammar of Dravidian Languages) என்ற நூல். கி.பி 1856இல் வெளிவந்த இந்த நூல் ஆங்கிலத்தில் உள்ளது. பாடப்புத்தகத்திற்காக அங்கொன்றும் இங்கொன்றும் சில பக்கங்கள் தமிழில் மொழிபெயர்த்து மேற்கோளுக்கு உபயோகப் படுத்துவதைத்தவிர வேறு முழுசான தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. 

வைகோ இன்று இந்த நூலைத் தமிழக அரசே முன் வந்து மொழிபெயர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு எத்தனை நாள் பிடிக்குமோ தெரியாது. மொழியியல், அதுவும் 12 திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஒப்பிட்டுப் பேசிகிற ஆராய்ச்சி நூலை மொழிபெயர்க்கப் பெரிய யத்தனம், திறமை, பொறுமை வேண்டும். மனத்தோடு பணமும் வேண்டும். இத்தகைய முயற்சியை நாம் ஏன் எடுக்கக் கூடாது என்று தோன்றி விட்டது. 

‘விசித்ரசித்தன்’ மொழிபெயர்ப்பு பொழுது போக்காக ஆரம்பித்தது என்றால், Comparative Grammar of Dravidian Languages மொழிபெயர்ப்பு நேர் எதிர்! ஆழ்ந்த பொறுமையுடன் மூல நூலைப் படித்து விஷயத்தை உள் வாங்கிக் கொள்ள வேண்டும், சரியான பதங்களைப் பிரயோகித்துப் பொருள் சற்றும் பிறழாதபடிப் படியெடுக்க வேண்டும். பக்கங்களுக்கும் குறைவு இல்லை. ஏறக்குறைய 600. இத்தனையும் அறிந்துகொண்டே இதில் இறங்கப் போகிறேன். அத்யாயங்கள் காலம் தாழ்த்தி வெளிவரலாம். நீண்ட இடைவெளிகூட ஏற்படும் அபாயமும் இருக்கிறது. ஆனால் Air Indiaவிலிருந்து தப்பிப் பிழைத்து வந்ததற்கு இதாவது பிரயோஜனமாக இருக்கட்டும். முதல் பக்கம் வருகிற திங்கள்? … பார்க்கலாம். அறிமுகம் பகுதியில் இருந்து …

Whilst the grammatical structure of each Dravidian language and
dialect will be investigated and illustrated in a greater or less degree,
in proportion to its importance and to the writer's acquaintance with
it, it will be his special and constant aim to throw light upon the
structure of Tamil — a language which he has for more than thirty-
seven years studied and used in the prosecution of his missionary
labours, and which is probably the earliest cultivated, and most highly
developed, of the Dravidian languages — in many respects the repre-
sentative language of the family. “

எனக்கு கால்டுவெல்லை விடத் தமிழ் மொழியோடு அதிக நாள் பழக்கம் உண்டுதானே. தினம் பேசி, வாசித்துப் பழகுகிறமொழிதானே, நம் அப்பாவும் தமிழாசிரியர், அவரிடம் வகுப்புப் பாடம் தேவைக்குமேல் இலக்கணம் கற்றது உண்மைதானே என்றெல்லாம் என்னை நானே தைரியப் படுத்திக்கொண்டு இந்த முயற்சியில் இறங்குகிறேன்!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக