திங்கள், 3 பிப்ரவரி, 2014

அறம் கூற்றாகுமா ?




தமிழகத்தில் இப்போது இளங்கோவடிகள் வார்த்தை விளங்கிக் கொண்டிருக்கிறது.

“அரசியல் பிழைத்தோற்கு அறம் கூற்றாகும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”

தசரதனுக்கு புத்திர சோகமாக ஊழ்வினை. திருதராஷ்டிரனுக்கு அரசு, தர்மம் எல்லாம் கடந்த புத்திர பாசம். குலத்தை, தேசத்தை – ஒட்டு மொத்த பாரத கண்டத்தையுமே பல காதம் பயணித்து குருஷேத்திரத்தில் குவிந்து – அழிவில் தள்ளிய யுத்தத்தில் கொண்டு விட்டது. எல்லாம் பார்த்துவிட்டுத்தான் போகமுடியும்.
படிப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு - சகலமும் துறந்த பாசப்பிணைப்பு! பதவி, பதவி, அதிகாரம் என்று குவிந்து விட்டால் … மனிதன் .. அவன்தான் .. அதுதான் … மனிதன்!! ம்ம்ம்??? இதில் யார் பாவம்? என்னவோ பாவமும்தான் தோன்றுகிறது. இதுவும் … மனிதம்தானா!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக