புதன், 19 பிப்ரவரி, 2014

நாட்டியம், நடனம், தமிழ்த் திரை – பகுதி 1



                

                  நாட்டியம் என்பது பத்மினி ‘மறைந்திருந்தே பார்க்கும் மருமம் என்ன? .. “ என்று அபிநயம் பிடிப்பது, மற்றதெல்லாம் நடனம் என்று குத்து மதிப்பா வச்சுக்கலாம். பழைய காலத்துல நாட்டியம் என்ற பெயரில் playback இல்லாததால் சத்தம் போடாம கையைக் காலை அசைக்கணும், ஏதுவான உடை கிடையாது, முறையான நாட்டியப் பயிற்சியும் கிடையாது. அதோட இயற்கையாகவே நாட்டியத்திற்கு இருக்க வேண்டிய உடலமைப்பும் கூட ஆரம்ப நாயகிகளுக்குக் கிடையாது. உதா: காதல் கனிரசமே .. ‘ என்று பி யு சின்னப்பா பாட அபிநயித்த அஞ்சலி தேவி, ‘மன்மத லீலையை வென்றோர் உண்டோ …’ என்று எம் கே தியாகராஜ பாகவதர் பாட அபிநயித்த டி ஆர் ராஜ குமாரி. ஆனா ரெண்டு பேருமே கண்ணசைவில் ரசிகர்களைக் கட்டுப்போட்டு அந்தப் பாடல்களை வெற்றியாக்கினார்கள். இல்லை என்றால் ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே .. ‘ என்பதற்குப் பதில் ‘கவலையத் தருவது நாட்டியக் கலையே …’ என்று ஆகியிருக்கும்.

                 ஆனா திரைத்துறையில் Technology வளர்ந்த பிறகுகூட சில நாயகிகள் நாட்டியம் என்று கஷ்டப் படுவது தொடரத்தான் செய்யுது. உதா: பானுமதி ‘அழகான பொண்ணு நான் … ‘ என்று ஒரு மாதிரியாக சமாளித்து ஆட்டம் காட்டியது; ‘நாதனைக் கண்டேனடி ..’ என்று லக்‌ஷ்மி படாத பாடு பட்டது; இன்னம் அடுக்கலாம். இதுக்கு நடுவுல எம்.ஜி.ஆர், சிவாஜி வேறே கிளம்பி அதுவும் முறையான நாட்டியப் பயிற்சி கொண்ட நாயகிகளோடு போட்டின்னு புகுந்து … கொடுமைடா சாமி! அச்சு அசல் குஸ்தி பயிற்சி மாதிரி எம்.ஜி.ஆர், ரொம்ப seriousஆ சிவாஜி .. சமீபத்தில் mirchi சிவா தேவலை! பிற்காலப் படங்கள்ல எப்படியோ இந்த நாட்டியக் கொடுமை குறைஞ்சு போச்சு. ஆனா இப்போ புது உருவத்துல வருதோன்னு பயத்தைக் கிளப்புது செய்தி. உதா: போடா போடி-ல Salsa dance-ன்னு … அது பரவால்லை, மறுபடி வரலட்சுமி ஏதோ குச்சுப்புடி ஆடப் போறதாக் கேள்வி. கடவுளே! (இன்னும்!?) ரஜினி, சத்யராஜ் எல்லாம் நாட்டியத்துல எறங்கலை.
(தொடரும் …)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக