புதன், 12 பிப்ரவரி, 2014

விசித்ரசித்தன் தகவல் - 2



விசித்ரசித்தன் ஆங்கில மூலம் ‘The Fountain Head‘ அந்தப் பேரிலேயே திரைப்படமாக வந்திருக்கிறது. ஆண்டு 1949 . நீண்ட நாட்களாக அதன் பிரதியைத் தேடிக் கொண்டிருந்தேன். உலகம் மறந்துவிட்ட படம்; அரிதாக அதுவும் அமெரிக்கா அல்லது இங்கிலாந்துவில் மட்டும் கிடைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். முற்றும் எதிர் பாராத தருணத்தில் பொது இடத்தில் காலை உணவு மேஜைப் பேச்சின் இடையில் சிக்கியது - ஹைதராபாத் நகரம் B.Arch  மாணவி; “எங்கள் கல்லூரியில் இந்தப் படம் இருக்கிறது. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இதை கட்டாயம் பார்த்துக் கட்டுரை எழுதவேண்டும்.“ அந்தக் கல்லூரியை அணுகாவிட்டாலும் பிறகு இணையதளம் மூலம் வாங்கிப் பார்க்க முடிந்தது.

படத்தின் நாயகனும் நாயகியும் … இறுதியில் காதலில் விழுந்ததாகக் கேள்வி. ஆனால் கதை அளவு படம் அத்தனை நல்லதாக அமையவில்லை. அயன் ராண்ட் திரைப்படத்துறை ஆள். அப்படியும் வரிக்கு வரி கதையின் வசனம் மாறாமல் பயன்பட்டிருந்தாலும் கதையின் கோர்வை, மையக் கருத்து படத்தில் வரவில்லை. அதனால்தானோ என்னவோ படம் அப்போது வெற்றி பெறவும் இல்லை. கனமான பாத்திரங்களைத் தாங்க நடிகர்களால் இயலவில்லை. கதாநாயகியின் (விசித்ரசித்தனில் இன்னும் அறிமுகம் ஆகாத பாத்திரம்) பாத்திரம் அப்படியே எதிர் பொருள் தொனிக்கிறது படத்தில். அது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நமது மலையாள/வங்காள திரைக் கலைஞர்கள் என்றால் சிறப்பான விருதுப்படமாக எடுத்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக