திங்கள், 2 ஜூன், 2014

தெலுங்கானாவுக்கு 'பிறந்ததின' வாழ்த்துக்கள்!

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.

தெலுங்கானாவுக்கு 'பிறந்ததின' வாழ்த்துக்கள்!



Hyderabad is painted pink today. June 2.

பஞ்சு மிட்டாய் நிறத்தில் ஊர் முழுக்கக் கொடிகள், தோரணங்கள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள்! பொதுமக்களில் நிறையப்பேர் அப்பாடா ஒரு வழியாய்ப் பிரச்சினை ஓய்ந்தது என்கிறார்கள். மறு சாராருக்கு இனித்தான் பிரச்சினை ஆரம்பம். அரசு அலுவலர்களுக்குப் பெரிய பிரச்சினை. அதுவும் ஓய்வு பெறும் வயதை எட்டியவர்களுக்கு எத்தனையோ கேள்விகள், அலைச்சல்கள் காத்திருக்கின்றன.

ஆங்காங்கு கதை கேட்டால் குத்துமதிப்பாக இந்தக்கதை இப்படித்தான் போகிறது:

ஹைதராபாத் நிஜாம் சுதந்திர இந்தியக் குடியரசில் சேர மறுத்தார். அவர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிதான் தெலுங்கானா. சர்தார் வல்லபபாய்ப் படேல் வெகு பாடுபட்டு கட்டக் கடைசியாய் இணைத்த பகுதி இது. வான்வெளித் தாக்குதல் அரிதாக இருந்த காலதிலேயே வான்வழித் தாக்குதல் நடத்தித்தான் ஹைதராபாத் சமஸ்தானத்தை வழிக்குக் கொன்டுவர முடிந்தது.

ஆனால் அப்போதைக்கு மாநிலங்கள் பிரிவினை மொழிவாரியாக இருந்ததால், தெலுங்கு மொழி பேசுகிற ஆந்திராவுடன் இணைக்கப் பட்டது. அப்போதே எதிர்ப்புக் குரல்கள் தோன்றினாலும், ஒன்றும் ஆகவில்லை. 

நீண்ட நாட்களாக நீரு பூத்த நெருப்பாக இருந்த பிரச்சினையை வரலாறு எதிர்பாராவிதமாகத் திருப்பம் நடத்தியது. சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் தான் கேட்ட இலாகா கிடைக்காத காரணத்தால், சந்திர சேகர ராவ் விலகி வந்து, தெலுங்கானா இராஷ்ட்டீய சமிதி தொடங்கினார். உண்ணாவிரதம், மறியல் , என்று மாணவர்கள் முழுமையாகக் களத்தில் இறங்க, போராட்டங்கள் தீவிரமாகி, சரி பிரித்து விட்டாலவது ஏதாவது நமக்குக் கிடைக்கும் என்று நப்பாசை கொண்ட அரசியல் காரணத்தால், பிரிக்கும் ஆணை பிறந்தது. கூடாது என்று பாதிக்கப் பட்டவர்கள் போராடினார்கள். தினம் கோடி வருமானம் கொடுக்கிற திருப்பதி வெங்கடாசலபதி கூடக் கோயில் வெறிச்சிட வரலாறு கண்டார். திருப்பதிக்கு 70+ நாட்களாகச் சென்னையில் இருந்து பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்து நிலையம் வெறிச்சோடியது. 

அந்தத் திருப்பதியா இது என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டே எப்படியோ ஒருநாள் மலை ஏறிவிட்டோம். தங்க ஆளில்லாமல் அறைகள் வெறிச்சோடிக் கிடக்க வரிசையில் நில்லாமல் கிராமத்து இரயில் நிலையத்தில் சடக்கென்று சீட்டு கிடைப்பது போல, தங்கும் அறை கிடைத்தது. நிதானமாகத் தரிசனமும் ஆயிற்று; இறங்க வழியில்லை. இன்னும் இரண்டு நாளில் பிரம்மோற்சவம் காணவேண்டிய பதி … எப்படியோ கடைசியில் அந்த பிரம்மோற்சவமும் நல்லபடியாய்த்தான் நடந்தது. பெருமாள்தான் கொஞ்சநாள் கூட்டம் வேண்டாம் என்று நினைத்தாரோ இல்லை எந்தக் பாவக் காலடி பட்ட துயரத்தை இப்படிப் போக்கிக் கொண்டாரோ தெரியாது.

நடந்தது நடந்துவிட்டது. அரசின் ஆணை பிறந்து விட்டது. தேர்தலும் நடந்து இரண்டு தலைவர்களும் தேறி விட்டார்கள். இதில்தான் மக்கள் உண்மையில் சமர்த்தாக நடந்து கொண்டார்கள். ஹைதராபாத்தை ‘ஹை-டெக் பாத்’தாக மாற்றியவர் சந்திரபாபு நாயுடு. ஆனால் போதும் வளர்ச்சி, நீங்கள் செய்ததெல்லாம் ஒரு தட்டு மக்களுக்கே, ஏழைகளை விட்டு விட்டீர்கள் என்று 9 ஆண்டுகள் அவரை ஒதுக்கியே வைத்து விட்டார்கள் ஆந்திர மக்கள். இப்போது, தனி மாநிலம் வருகிறது, அதற்கு ஒரு தலை நகர் வேண்டும் விரைவில் என்றதும், மீண்டும் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர முதல்வராக்கியிருக்கிறார்கள். ஏதோ மக்கள் ஆட்சியால் ஆன காரியம்.

இதெல்லாம் சரி, இனி அவரவர் ஆகவேண்டிய காரியம் பார்க்க வேண்டும். ஆனால் அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் மாறாது (surgery of olden days where one gets long, deep scars lasting for rest of lifetime) என்பதைப் போல அறுத்த வடு ‘தெலுங்கானா மாநிலம் உருவாகிய தினம்’ என்ற பெயரில் விட்ப்பட்டு இருக்கிறது. இந்த நாள் குறிப்பாகத் தேர்ந்தெடுத்த காரணம் இது ‘இத்தாலி தேசத்தின் குடியரசு தினம்’. நல்லா இருக்கா டீட்டெய்லு!
 *****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக