ஞாயிறு, 22 ஜூன், 2014

பழக்கம் - 2


Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.


பழக்கம் - 2

முதல் வரி: "சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்"

'பழக்கம்' என்பது பற்றி ஒரு சங்கப் பாடல். நாலு வரிப் பாடலின் இரண்டாம், மூன்றாம் வரிகள் இன்று.

"வைத்ததொரு கல்வி மனப் பழக்கம் - நித்தம்
 நித்தம் நடையும் நடைப் பழக்கம்"
 


வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்

தாளும் மையும் கண்டு பிடிக்காத காலத்தில் கல்வி, அறிவு அரிதான, அருமையான பொருளாக இருந்தது. கல்வி கற்க வேண்டுமானால், மனத்தில்தான் இருத்திவைத்துக் கொள்ள வேண்டும். மனப்பாடம். இப்போது அந்த அவசியம் இல்லை என்றாலும் – தாளும் மையும் மறைந்து போகுமோ என்ற அளவு நிலைமை வந்து - வேறு கருவிகள் வந்தாயிற்று –விட்டாலும் ஒரு சில விஷயங்களை மனப்பாடம்தான். Password மறந்து போனால் போனதுதான். எழுதி வைத்துக் கொண்டால், ஆபத்து. எதையும் மனதில் வைத்துக் கொண்டால்தான் மண்டையில் ஏறும்.

நித்தம் நடையும் நடைப் பழக்கம்
சிவாஜி கணேசன் சில படங்களில் – உதா: திருவிளையாடலில் மீன் பிடி வலைஞனாகக் கடற்கரையில் நடப்பது – ஒரு தினுசு நடை காட்டினார். எப்படி ஒய்யார மாக நடப்பது என்பது ‘fashion training’ என்று காசு வாங்கிக் கொண்டு கற்றுக் கொடுக்கப் படுகிறது. சிலர் காலில் செருப்பு இல்லை என்றால் நடக்கச் சிரமம். சிலருக்குக் காலில் செருப்புப் போட்டால், நடக்கச் சிரமம். அது அவரவர் பழக்கத்தைப் பொறுத்தது. சிலருக்கு எத்தனை மைல் வேண்டுமானாலும் நடந்து போக அலுக்க மாட்டாது; சிலருக்கு நடந்தே பழக்கமில்லை, கொஞ்ச தூரத்திற்கும் வண்டி வேண்டும். இப்படி ‘நடையும் நடைப் பழக்கம்’.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக