சனி, 16 ஏப்ரல், 2016

வேனிற்கால இரவு வானம்


இரவில் மொட்மை மாடியில் படுத்து இருள் போர்த்திய வானத்தையும் நட்சத்திரங்களையும் கவனிக்கிறீர்களா? நன்றாக உற்றுப் பாருங்கள். அநேகமாக எல்லா நட்சத்திரங்களுமே ஒரு சமயம் திடீரென்று ஓட ஆரம்பிக்கும். ஒரு சுற்று சுற்றி மேலே ஓடி மறுபடி கீழே ஓடி அலைபாயும். மணிக்கு 1673.7 கி.மீ வேகத்தில் விண்ணில் ஓடிக் கொண்டிருக்கிற பூமி மீது பயணிக்கிற நாம் இந்த விண்வெளிப் பயணத்தை கண்ணால் கண்டு, உணர்ந்து அனுபவிக்க இந்த நட்சத்திர நடனம் உதவுகிறது.

வேனிற்கால இரவு வானம் தெளிவாகவே இருக்கிறது. கடற்கரை ஓரம், காட்டின் நடுவில், மொட்டை மாடியில் ... இடம் பார்த்து இரவு பார்த்தால் விண்ணின் ஜாலம் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக