செவ்வாய், 8 ஏப்ரல், 2014

இராம நவமி



Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.

note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog. 


 விசித்ரசித்தன் கதை முதல் 10 அத்யாயங்கள் இங்கே
              

                                            இராம நவமி



இன்று இராம நவமி. இந்தியாவில் இராம காதை கலாச்சாரத்தோடு கலந்த விஷயம். ஆயிரம் ஆண்டுகள், பல நூறு படையெடுப்புகள் எல்லாம் கடந்து பாதுகாக்கப் பட்டு வருகிற கர்ணபரம்பரைக் கதையோடு பல மொழிகளிலும் காவியமாகி நிலை பெற்றுவிட்ட நீதி போதனைக் கதை. 



இராமன் வாழ்வில் சந்தோஷம் கொஞ்ச காலமே. விளையாட்டுப் பருவம் முடிகிற முன்னே போருக்கு அழைத்துப் போனார் விசுவாமித்திரர். அறுபதினாயிரம் மனைவி கொண்ட தந்தையின் பிள்ளை ஒரு பெண்ணிடம் உன்னைத் தவிர யாரையும் நினையேன் என்று உறுதி கொடுத்துக் காத்தான். தந்தை சொல் நிறுத்த மணிமுடி சூட வேண்டிய நேரத்தில் கானகம் போனான். புத்திர சோகத்தில் தந்தை இறந்தார்; சகோதர பாசத்தில் ஒரு தம்பி உடனிருந்து தூங்கா விரதம் பூண்டான்; இன்னோர் தம்பி தவ வேடம் பூண்டு ராஜ்ய பாரம் சுமந்தான்; மனைவி மாற்றானால் சிறை எடுக்கப்பட்டுப் பிரிவுத் துயரம் தந்தாள்; அறத்திற்குப் புறம்பாக(இன்னமும் இராமன் செய்தது சரிதானா என்று பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்கும் அளவு) வாலியுடன் போர் செய்தான்; ஒரு வழியாய்க் கடல் தாண்டிப் போரிட்டு மனைவியை மீட்டபின்பும் அவளை அக்னியில் இறக்கித்தான் ஏற்றான். அதன் பின்னும் சாதாரணக் குடிமகனின் பேச்சுக்கு அஞ்சி அவளைக் கர்ப்பிணிக் காலத்தில் கானகத்தில் விட்டான். இத்தனைக்கும் அவன் செருப்பு கூடக் கானகம் போகாமல் அரியணை ஏறி அமர்ந்துகொண்டது. துயரமெல்லம் அவனுக்கும் அவனோடு தொடர்புடைய உயிர்களுக்கும் மட்டும்தான்! சக்கரவர்தித் திருமகன் ஒருவனுக்கே இந்த கதி என்றால்இராம காதை கேட்கிறவர்கள் இப்படித்தான் ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக