Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation.
note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.
note: This is translation of Ayn Rands book The Fountain head. The book is in public domain and this Tamil translation is copyright to the author of this blog.
ஆறுபடை வீடு – 3.சுவாமிமலை
கும்பகோணம்
அருகில் சிறு குன்று. கோவில் குன்றின் அடிவாரத்தில் ஆரம்பிக்கிறது. தமிழ் ஆண்டுப் பெயர்கள்
60ம் அமைந்த 60 படிகள் ஏறிப் போனால் … இதுவும் எதிர் பாராத தரிசனம்!
ஒரு
தடவை பிரமன் பிரணவ மந்திரத்தை மறந்து போனார். ஆகவே சிறு பிள்ளை முருகன் பிரமனைச் சிறையில்
அடைத்துவிட்டான். எல்லோரும் போய் சிவனிடம் முறையிட்டார்கள். சிவன் தன் மகனை அழைத்து,
மடியில் இருத்தி வைத்து, விசாரித்தார்; சரி பிரமனைச் சிறையில் அடைத்தாயே, உனக்கு அந்த
மந்திரம் தெரியுமா? என்று கேட்டார். பதிலுக்கு முருகன், தந்தை மடியில் அமர்ந்தபடியே
பிரணவ மந்திரத்தைத் தந்தையிடம் ஓதினார். ஆகவே தந்தைக்கு உபதேசித்த இடம் ஆகிவிட்டது
அந்த இடம். அதுதான் சுவாமி மலை.
முதல்
முறை போகும் போது இன்னும் ஐந்தாம் வகுப்பு தாண்டாத பருவம். தல வரலாற்றைக் கேள்விப்பட்டதும்
ஆஹா! குட்டி முருகன் அப்பா மடியில் வீற்றிருக்கிற கோலம் பார்க்கலாம் என்ற எதிர் பார்ப்பு!
அங்கே போனால் நின்ற திருக்கோலத்தில் பெரிய முருகன்! அன்று அது பெரிய ஏமாற்றமாக இருந்தது.
காவேரிக்
கால்வாய் ஓடி வளம் பெருக்குகிற வயல்வெளி சூழ்ந்த கிராமம், ஐம்பொன் சிலை வடிக்கும் தொழிலுக்குப்
புகழ் பெற்ற இடம். கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையை விட்டு சற்று ஒதுங்கி இருக்கிறது.
ஆகவே சுவாமி மலை ஊருக்குள் போகிற பேருந்தாகப் பார்த்து ஏறவேண்டும். ஆனால் இயற்கை எழில்
இரசிக்கலாம் என்பவர்கள் சாலையிலேயெ இறங்கி காவேரி வாய்க்கால் கடந்து சுவாமிமலை போகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக