வெள்ளி, 11 ஏப்ரல், 2014

ஆறுபடை வீடு –2.திருப்பரங்குன்றம்

Note: In this blog you can read Tamil Translation of Novel The Fountainhead by Ayn Rand. விசித்ரசித்தன் is the title given to this Tamil Translation. you can use the links in the right hand side of this page to read the older chapters since Jan 2014.




ஆறுபடை வீடு –2.திருப்பரங்குன்றம்
படைவீடு என்றால் போர்வீரர்கள் தங்கும் இடம் என்று பொருள் படும். ஆறுபடை வீட்டில் முருகன் தேவர் படைக்குத் தலைமை தாங்கிப் போரிட்டுச் சூரசம்ஹாரம் செய்த கதையோடு தொடர்புடைய இடங்கள் 3 மட்டுமே. அதில் திருப்பரங்குன்றமும் ஒன்று.
தல வரலாறு: சூரசம்ஹாரம் முடிந்ததும், வெற்றிக்குப் பரிசாக தேவயானியை முருகனுக்கு மணம் முடித்த தலம்.
தல யாத்திரை: மதுரையில் இருந்து டவுன் பஸ் அடிக்கடி உண்டு. மதுரை நகரம் விரிவடைந்து திருப்பரங்குன்றம் ஏறக்குறைய மதுரையின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டது. திருமணங்கள் அதிகம் நடைபெறுவதால் முகூர்த்த நாட்களில் கூட்டம் அதிகம். அதோடு வழக்கமாக தரிசனத்திற்கு வருகிற உள்ளூர், மதுரை மக்களும் நாள் கிழமைகளில் கூடி வருஷம் முழுக்க ஜே ஜே என்று இருக்கும். மதுரை விமான நிலையத்திலிருந்து மிக அருகில் உள்ளது. மதுரையிலிருந்து தெற்கே போகும் புகைவண்டிகள் திருப்பரங்குன்றம் நிலையத்தில் நிற்கின்றன.
தரிசனம்: கோவில் பெரியது. குன்றின் அடிவாரத்தில் இருக்கிறது. சன்னிதி உண்மையில் குடைவரை. அதாவது மலைக் குகையைக் குடைந்து சுவர்களில் செதுக்கிய கடவுள் உருவங்கள். முருகனுக்குப் பாலாபிஷேகம் விசேஷம். நாள் கிழமைகளில் மக்கள் அவரவருக்கு முடிந்த அளவு பாலாகக் கொண்டுவந்து குடம் நிறைத்து விடுவார்கள்.
சரவணப் பொய்கை: மலைச் சுனை வற்றாத பொய்கையாகக் கட்டப் பட்டுள்ளது. திருமணம் கைகூட இங்கு நீராடுகிறார்கள்.
இங்கு குன்று அதிகம் மரம், செடி கொடி அதிகம் இல்லாத பாறை நிறைந்தது. குன்றின் உச்சியில் காசி விஸ்வநாதர் ஆலயமும் தர்ஹா ஒன்றும் உள்ளது. கொஞ்சம் கஷ்டமான மலை ஏற்றம். வெயில் பொழுதில் மலை ஏறும் முயற்சியைத் தவிர்ப்பது நல்லது.
(அடுத்த தல யாத்திரை – திருப்பரங்குன்றம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக